Paristamil Navigation Paristamil advert login

13 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி : 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அங்கீகரிப்பு!!

13 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி : 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அங்கீகரிப்பு!!

9 மார்கழி 2025 செவ்வாய் 21:56 | பார்வைகள் : 3566


தேசிய சபை, சமூக பாதுகாப்பு நிதி (பட்ஜெட்) சட்டத் திட்டத்தை (PLFSS) 247 ஆதரவிலும் 234 எதிர்ப்பிலும், வெறும் 13 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியுள்ளது. 93 பேர் வாக்களிக்கவில்லை. எனவே பட்ஜெட்டைக் காப்பாற்ற பதின்மூன்று வாக்குகள் போதுமானதாக இருந்தன.

ஓய்வூதியச் சீர்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்ட நிலையில், றூனசோன்ஸ் (Renaissance), மோடெம் (MoDem), சோசலிஸ்ட் கட்சி (le Parti socialiste) மற்றும் லியோ (Liot) கட்சிகள் ஆதரித்துள்ளனர். 

லே றூபப்லிக்கன்ஸ் (Les Républicains), ஹோரிசோன்ஸ் (Horizons), இன்சுமிகள் (les insoumis), கம்யூனிஸ்டுகள் (les communistes) மற்றும் RN–UDR எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்தச் சட்டம் இல்லையெனில் சமூக பாதுகாப்பு பற்றாக்குறை 2026இல் 30 பில்லியன் யூரோக்களை எட்டும் என்று அரசு பலமுறை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹோரிசோன்ஸ் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள், தலைவர் எடுவார்ட் பிலிப்பின் வேண்டுகோளின்படி, வாக்குப்பதிவில் இருந்து விலகி நிற்க முடிவு செய்தனர். 

கடைசி தடவையாக செனட்டில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக தேசிய சபைக்கு திரும்பும் இந்த உரைக்கு, அரசியல் கட்சிகள் இடையே பலத்த மோதலும் பதற்றமும் நீடித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்