Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் அமைதி முயற்சிகளிலிருந்து அமெரிக்கா விலகல்

உக்ரைன் அமைதி முயற்சிகளிலிருந்து அமெரிக்கா விலகல்

8 மார்கழி 2025 திங்கள் 17:45 | பார்வைகள் : 214


உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த முயற்சிகளில் இருந்து அமெரிக்கா விலக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த செயல்முறை முயற்சிகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலக கூடும் என்று அவரது மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினை அமெரிக்க மக்களுக்கு எந்த வகையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் உக்ரைன் தொடர்பான நிலைமைகளைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் வலிமையான மற்றும் பயன் தரக்கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் வலியுறுத்தியுள்ளார்.

 

தோஹா மன்றம் 2025-ல் ஸ்கை நியூஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அதில், உக்ரைன் விவகாரத்தில் இருந்து அவர் விலகலாம் என்று நினைக்கிறேன், என்னுடைய தந்தையின் தனித்துவமான மற்றும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் என்ன செய்வார் என்று கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

டொனால்ட் டிரம்ப் ஜூனியர் இந்த கலந்துரையாடலின் போது அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்