Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்த எல்லை மோதல்- 3,85,000 மக்கள் வெளியேற்றம்

தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்த எல்லை மோதல்- 3,85,000 மக்கள் வெளியேற்றம்

8 மார்கழி 2025 திங்கள் 16:45 | பார்வைகள் : 209


தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தீவிரமான எல்லை மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

 

 

தாய்லாந்து - கம்போடியா மீண்டும் எல்லை ராணுவ பதட்டங்கள் அதிகரித்துள்ளது.

 

கம்போடியாவின் இராணுவ நிலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி இருப்பதாக தாய்லாந்து இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

தாக்குதல் தொடங்கியதற்கு இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

தாய்லாந்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வின்டாய் சுவரீயின் தெரிவித்த தகவலில், எல்லையில் தாய்லாந்து வீரர்களை குறிவைத்து கம்போடிய படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் தாய் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்தே கம்போடிய இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வின்டாய் சுவரீயன் குறிப்பிட்டுள்ளார்.

 

அதே சமயம், தாய்லாந்து ராணுவம் தான் முதலில் சண்டையை தொடங்கியதாக கம்போடிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

மேலும், பிராந்தியத்தில் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளை தாய்லாந்து உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

அக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த முயற்சிகளின் அடிப்படையில், தாய்லாந்து - கம்போடியா இடையிலான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

 

இருப்பினும் அண்டை நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையிலான நீண்ட கால பகை அவ்வப்போது எல்லை மோதலை தூண்டிவிடுகின்றன.

 

தற்போதைய எல்லை மோதலை தொடர்ந்து, சுமார் 3,85,000க்கும் அதிகமான பொதுமக்களை எல்லை மாவட்டங்களில் இருந்து தாய்லாந்து ராணுவம் வெளியேற்றியுள்ளது.

மேலும் 35,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக கம்போடியாவின் கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்