Paristamil Navigation Paristamil advert login

அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

8 மார்கழி 2025 திங்கள் 08:28 | பார்வைகள் : 169


ஒரு சிலர், அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர்,' என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3 ஆயிரத்து 65 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்தார். மேலும், 2 ஆயிரத்து 70 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அரசியல் சூழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மக்களுக்காக பல திட்டங்களை நம் அரசு கொண்டு வந்ததால் தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். வயிற்று எரிச்சலால் ஆரோக்யமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். உறுதியாக சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் முறியடிப்போம்.

என்னாச்சு?

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிருபிக்கும் விதமாக, ரூ.36,660 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதுதான் எங்களின் அரசியல். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு ஏதும் செய்வதில்லை.

மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுத்தீர்கள். மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?
 

வர்த்தக‌ விளம்பரங்கள்