Paristamil Navigation Paristamil advert login

கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்திய கப்பல் மீது தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

6 மார்கழி 2025 சனி 06:18 | பார்வைகள் : 206


கரீபியன் கடல் வழியாக போதைப்பொருளைக் கடத்திச் சென்ற கப்பலை இலக்குவைத்து அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை 4.12.2025நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

 

வெனிசுலாவில் இருந்து பசுபிக் மற்றும் கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் “ஒப்பரேஷன் சௌத்தர்ன் ஸ்பியர்” (Operation Southern Spear) நடவடிக்கையினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசு மிகக் கடுமையாக முன்னெடுத்து வருகிறது.

 

இந்நிலையில், கரீபியன் கடல் வழியாக கப்பலில் போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக அமெரிக்க இராணுவத்துக்கு உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், இராணுவம் அக்கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

 

இதன்போதே போதைப்பொருள் கடத்திச் சென்ற கப்பலை கண்டறிந்து, அதன் மீது அமெரிக்க படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் கப்பலில் இருந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த ஆண்டில் “ஒப்பரேஷன் சௌத்தர்ன் ஸ்பியர்” நடவடிக்கையின் கீழ் பசுபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் 20 முறை தாக்குதல் நடத்தியதாகவும் அத்தாக்குதல்களில் 80க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்