பிரான்ஸ் அணு நீர்மூழ்கிக் கப்பல் தளத்தின் மேல் ட்ரோன் அதிர்வும் துப்பாக்கிச் சூடுகளும்!!
5 மார்கழி 2025 வெள்ளி 15:21 | பார்வைகள் : 449
பினிஸ்டெர் (l'Île Longue - Finistère) பகுதியில் உள்ள பிரான்ஸ் அணு நீர்மூழ்கிக் கப்பல் (SSBNs) தளத்தின் மேல் பறந்த ஐந்து ட்ரோன்களை செயலிழக்கச் செய்ய, கடற்படை fusiliers marins படையினர் கடந்த வியாழக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
ட்ரோன்கள் சுமார் 19h30 மணிக்கு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக எதிர்-ட்ரோன் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பிரான்சின் அணுசக்தித் தடுப்புப் படையின் சரணாலயமான இல் லாங்கு தளம், கடற்படையுடன் ஒருங்கிணைந்து செயல்படும் 120 கடல்சார் ஜெண்டர்ம்களால் பாதுகாக்கப்படுகிறது. இந்த தளம் பிரான்சின் நான்கு SSBNகளைப் பராமரிக்கிறது, அவற்றில் குறைந்தபட்சம் ஒன்று அணுசக்தித் தடுப்பை உறுதி செய்வதற்காக கடலில் நிரந்தரமாக உள்ளது.
அண்மையில், இதுபோன்ற ட்ரோன் பறப்புகள் பிரான்ஸ் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவின் பல முக்கிய ராணுவ பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் அதிகரித்து வருகின்றன; இந்த செயல்களின் பின்னால் ரஷ்யாவின் தாக்கம் இருக்கலாம் என்று பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan