உக்ரேனிய சிறார்களை வட கொரியாவிற்கு அனுப்பும் ரஷ்யா - பின்னணி
5 மார்கழி 2025 வெள்ளி 11:28 | பார்வைகள் : 191
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உக்ரேனிய சிறார்களில் சிலரை புடின் நிர்வாகம் வட கொரியாவிற்கு அனுப்பியுள்ள தகவல் கசிந்துள்ளது.
உக்ரேனிய சிறார்களின் மறு கல்விக்காகவே வட கொரியாவிற்கு அனுப்புவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மனித உரிமைகள் குறைதீர்ப்பாளர் Dmytro Lubinets தெரிவிக்கையில்,
வட கொரியாவிற்கு அனுப்பும் உக்ரேனிய சிறார்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றார். மிகவும் அடக்குமுறை எதேச்சதிகாரம் கொண்ட வட கொரியா சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுடன் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால், சிறார்கள் விவகாரத்தில் ரஷ்யா இதுவரை வெளிப்படையான கருத்தேதும் வெளியிடவில்லை. இந்த நிலையில், கியேவில் செயல்படும் மனித உரிமைகள் குழுவால் வெளியிடப்பட்ட சாட்சியத்தை மேற்கோள் காட்டி, Dmytro Lubinets தெரிவிக்கையில்,
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதி, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் அமைந்துள்ள 165 முகாம்களின் சிறார்களுக்கு மீண்டும் கல்வி கற்பிக்க ரஷ்யா முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒருபகுதியாகவே வட கொரியாவிற்கு அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, புதன்கிழமை அமெரிக்க செனட்டில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியத்ததில், குறைந்தபட்சம் சில நூறு குழந்தைகள் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சாங்டோவன் கோடைக்கால முகாமுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அங்கே, ஜப்பானிய இராணுவத் திறன்களை அழிக்க அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது, மேலும் 1968ல் ஒரு அமெரிக்க உளவு கப்பலைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்பான கொரிய வீரர்களையும் சந்தித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா கிட்டத்தட்ட 20,000 குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளது அல்லது வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்துள்ளது என்று உக்ரைன் அரசாங்கம் கூறுகிறது.
ரஷ்யா தரப்பிலிருந்து இதை ஒப்புக்கொண்டதுடன், சிறார்களின் பாதுகாப்பிற்காக அவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.
சிறார்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் விளாடிமிர் புடின் மற்றும் அவரது குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மீது 2023ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan