ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய பாரம்பரிய நிகழ்வு தொடர்பில் அதிரடி முடிவு
4 மார்கழி 2025 வியாழன் 15:46 | பார்வைகள் : 256
வடகடலில் அமைந்துள்ள ஜேர்மனிக்கு சொந்தமான Borkum என்னும் தீவில், ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, Klaasohm festival என்னும் விழா கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த விழாவின்போது, ஆட்டுத்தோல் உடையும், பறவைகளின் இறகுகளையும் அணிந்துகொண்ட இளைஞர்கள், பெண்களின் பின்பக்கத்தில் ஆடுமாடுகளின் கொம்புகளைக் கொண்டு அடிப்பது வழக்கமாக இருந்துவந்தது.
2023ஆம் திகதி, இந்த சர்ச்சைக்குரிய விடயம் குறித்த வீடியோ ஒன்றை ஊடகம் ஒன்று வெளியிட்டது.
இளைஞர்கள் தாங்கள் வேடிக்கைக்காக பெண்களை அடிப்பதாகவும், அது பாரம்பரியம் என்றும் கூற, பெண்களைக் கேட்டால், அது ஆண்களுக்கு மட்டுமே பிடித்த விடயம் என்றும் தங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.
பகல் நேரத்தில் அந்த விடயம் விளையாட்டாக காணப்பட்ட நிலையில், அதே நாளில் இரவு நேரத்தில், இளைஞர்கள் பெண்களைத் துரத்தி பயங்கரமாக அடிப்பதையும், அதை சிறுபிள்ளைகள் வரை பார்த்து ரசிப்பதையும் அந்த ஊடகம் படம் பிடித்திருந்தது.
இளைஞர்கள், தாங்கள் விளையாட்டாக லேசாக தட்டுவதாக கூறியிருந்த நிலையில், தான் அடித்த ஒரு பெண், ஐந்து அல்லது ஆறு நாளாவது உட்கார முடியாமல் அவதியுற்றால், அதை அந்த இளைஞர் பெருமையாக கருதுவதும் உண்டு என்பதும், பெண்களுக்கு காயமும் பயங்கர வலியும் ஏற்படுகிறது என்பதும் ஊடகவியலாளர்களின் பேட்டியிலிருந்து தெரியவந்தது.
அந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பெண்களை அடிக்கும் அந்த பாரம்பரியத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டும், பெண்களை பாதிக்கும் அந்த பாரம்பரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் தாங்கள் தாக்கப்பட்டால் பொலிசாரிடம் புகாரளிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan