Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : €400,000 யூரோக்கள் பெறுமதியுள்ள மரங்கள் சேதம்!!

பரிஸ் : €400,000 யூரோக்கள் பெறுமதியுள்ள மரங்கள் சேதம்!!

4 மார்கழி 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 2372


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள பல மரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, பரிஸ் நகரசபை வழக்கு பதிவு செய்துள்ளது. சேதமாக்கபட்ட மரங்களின் மொத்த மதிப்பு   €400,000 யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் இந்த சேதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக 79 மரங்கள் பகுதியாக  வெட்டப்பட்டும், மரத்தின் பட்டைகள் வெட்டப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. 16 ஆம் வட்டார நகரசபை இத்தகவலை நேற்று டிசம்பர் 3, புதன்கிழமை உறுதி செய்துள்ளது. அத்தோடு இந்த செயலுக்கு கண்டனங்கள் வெளியிட்டதோடு, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேத விபரங்களை கணக்கிட்ட நகரசபை, 410,000 யூரோக்கள் பெறுமதியுள்ள சேதமே ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்