சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை : இரத்த குளுக்கோஸ் உணர்கருவிகள் உலகளவில் திரும்பப் பெறப்படுகின்றன!!
4 மார்கழி 2025 வியாழன் 08:16 | பார்வைகள் : 5079
ஆபோட் (Abbott) நிறுவனம் தயாரித்த சில FreeStyle Libre 3 மற்றும் FreeStyle Libre 3 Plus இரத்த சர்க்கரை உணர்கருவிகள்(sensors) தவறான அளவீடுகளை வழங்கக்கூடியவை என கண்டறியப்பட்டதால், அவை பதினேழு நாடுகளில் திரும்பப் பெறப்படுகின்றன. இந்த கோளாறு ஏழு மரணங்களுக்கும் 736 கடுமையான சம்பவங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த சர்க்கரை அளவை தவறாகக் காட்டும் இந்த உணர்கருவிகள் ஒரே உற்பத்தி தொகுதியைச் சேர்ந்தவை எனவும் ஆபோட் குறிப்பிடுகிறது. இந்த உணர்கருவிகள் தோலில் ஒட்டப்பட்டு சர்க்கரைநோயாளிகளின் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முக்கிய சாதனங்களாகும்.
அமெரிக்காவில் மட்டும் மூன்று மில்லியன் கோளாறான உணர்கருவிகள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்தகைய உணர்கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதால், அனைத்து நாடுகளிலும் திரும்பப் பெறல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan