Paristamil Navigation Paristamil advert login

ஜனவரி 1 முதல்... - மோசடி தொலைபேசி அழைப்புக்களை அடையாளம் காண.. புதிய திட்டம்!

ஜனவரி 1 முதல்... - மோசடி தொலைபேசி அழைப்புக்களை அடையாளம் காண.. புதிய திட்டம்!

4 மார்கழி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 3472


தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும் மோசடிக்காரர்களை இலகுவில் அடையாளம் காண்பதற்காக புதிய திட்டம் ஒன்றை பிரெஞ்சு தொலைத்தொடர்பு கண்காணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, மோசடிக்காரர்கள், வியாபார, விளம்பரங்கள் போன்ற நோக்கத்துக்காக தொலைபேசி அழைப்புகள் பெறப்படும் போது, உங்கள் தொலைபேசி திரையில் அதன் இலக்கங்கள் மறைக்கப்பட்டே காட்சிப்படுத்தப்படும். "numéros masqués" என அழைக்கப்படும் இந்த திட்டம், வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

திரையில் எண்கள் தோன்றாமல் விடுவதால் அழைப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும், அவ்வாறான அழைப்புக்களை நிரந்தரமாக தடை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பிரான்சில் தொலைபேசியூடாக விளம்பரங்கள், வியாபாரங்கள், விற்பனை முகவர்கள் என தொல்லை கொடுக்கப்பட்டதாக 18,000 இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்