பாலியல் மற்றும் உறவுமுறைக் கல்வியை செயற்படுத்துவதில் தாமதம்! - நீதிமன்றத்தில் வழக்கு!!
3 மார்கழி 2025 புதன் 17:58 | பார்வைகள் : 1805
பாலியல் மற்றும் உறவுமுறைக் கல்வியை ( séances d'éducation à la vie affective et sexuelle) நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதா தெரிவிக்கப்பட்டு அரசாங்கம் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்கத்துக்கு நேற்று டிசம்பர் 2 ஆம் திகதி பரிஸ் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி மிக விரைவாக பாடசாலைகளில் பாலியல் மற்றும் உறவுமுறைக்கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரெஞ்சு சட்டத்தின் படி இந்த வகுப்புகள் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குரிய கல்வி படிமுறையை உருவாக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றம் கண்டனம் வெளியிட்டதோடு, குற்றப்பணமும் அறவிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம், ’தாமதத்துக்கான’ குற்றப்பணமாக €1 யூரோவினை அறவிட்டது.
வருடத்துக்கு குறைந்தது மூன்று வகுப்பு அமர்வுகளை கொண்டதாக இந்த பாலியல் கல்வி அமைந்திருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan