மக்ரோனின் சீனப்பயணம் பிரான்ஸ்–சீனா உறவை வலுப்படுத்துமா?
3 மார்கழி 2025 புதன் 08:20 | பார்வைகள் : 1272
2017 ஆம் ஆண்டு எலிசே அரண்மனையில் பதவியேற்றதிலிருந்து இம்மானுவேல் மக்ரோன் சீனாவிற்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும். இம்மானுவேல் மக்ரோன், தனது மனைவி பிரிஜிட் மக்ரோனுடன், டிசம்பர் 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அதிகாரபபூர்வ பயணமாக சீனாவுக்குச் செல்ல இருக்கிறார்.
சீனாவுக்கான மக்ரோனின் பயணம், பிரான்ஸ்–சீனா வர்த்தக உறவுகளைச் சமநிலைப்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. சீனாவுடனான பிரான்ஸின் வர்த்தக சமநிலை குறைந்து வரும் நிலையில், ஆற்றல், தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளைப் பெறுவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதேசமயம், ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார சமநிலையை வலுப்படுத்துவதிலும் பிரான்ஸ் முக்கிய பங்காற்ற விரும்புகிறது. உக்ரைனில் நடக்கும் போரின் பின்னணியில், சீனாவின் பங்கு மற்றும் அதன் ரஷியாவுடனான உறவு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சூழலில், மக்ரோன், உலகளாவிய நிலைமை, பாதுகாப்பு, மற்றும் சர்வதேச ஒழுங்கு குறித்து சீனாவுடன் உரையாட விரும்புகிறார். எனினும், சீனாவின் நிலைப்பாடு காரணமாக இந்தப் பகுதியில் முன்னேற்றம் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கலாம். இதற்கிடையில், பிரான்ஸ்–சீனா உறவை புதுப்பித்து, பொருளாதார மற்றும் தூதரகப் பங்களிப்பை ஆழப்படுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என நம்பப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan