சோம்ப்ஸ்-எலிசேயின் புத்தாண்டு கொண்டாட்டம் பாதிப்பு! - பாதுகாப்பு காரணங்களுக்காக..!!
2 மார்கழி 2025 செவ்வாய் 15:19 | பார்வைகள் : 2530
உலகின் மிக அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆண்டுதோறும் இடம்பெறும் புத்தாண்டு கொண்டாத்தின் ஒரு பகுதி இவ்வாண்டு பாதிக்கப்பட உள்ளது.
புத்தாண்டு வரவேற்பு வானவேடிக்கைகளுடன் இசை நிகழ்ச்சியும் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெறுவது அறிந்ததே. இம்முறை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக இந்த இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31, மாலை அங்கு கூடும் மக்கள் வெறுமனே வானவேடிக்கைகளை மட்டுமே பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு என்றல்லாமல், பரிஸ் உள்ளிட்ட பெரு நகரங்களில் பெருமளவான மக்கள் திரள் கூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ, இந்த இசை நிகழ்ச்சி இரத்தினை அறிவித்துள்ளார்.
அதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பரிசில் மட்டும் 6,000 பாதுகாப்பு படையினர் (காவல்துறையினர், CRS, ஜொந்தாமினர், இராணுவத்தினர்) குவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan