Paristamil Navigation Paristamil advert login

பாக்ஸிங் டே டெஸ்டில் கேப்டன் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - காரணம் என்ன

பாக்ஸிங் டே டெஸ்டில் கேப்டன் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - காரணம் என்ன

23 மார்கழி 2025 செவ்வாய் 13:12 | பார்வைகள் : 121


இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், பேட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.

இந்தப் போட்டிகளில் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) நீக்கப்பட்டுள்ளார். முதுகில் ஏற்பட்ட அழுத்தக் காயம் காரணமாக மறுவாழ்வு சிகிச்சையில் இருந்த கம்மின்ஸ், சிகிச்சையின் வரம்புகளை மீறி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போது அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மெக்டொனால்ட் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேபோல், தசைநார் கிழிந்த காயத்திற்காக நாதன் லயன் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹை ரிச்சர்ட்ஸன், சுழற்பந்து வீச்சாளர் டோட் மர்பி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்