Paristamil Navigation Paristamil advert login

தையிட்டி விகாரையும் நல்லூர் கோயிலும்: சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா!

தையிட்டி விகாரையும் நல்லூர் கோயிலும்: சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா!

22 மார்கழி 2025 திங்கள் 13:01 | பார்வைகள் : 200


தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்னர் நல்லூர் ஆலயத்தையும், யாழ். கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லூர் கோயில் கர்ப்பகிரகத்தில் முஸ்லிம் சமாதி உள்ளது அதையும் உடைக்க வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.

“முன்னதாக நல்லூர் ஆலயம் கிட்டு பூங்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் அமைந்திருந்தது.தற்போது ஒல்லாந்தர் கோட்டை அமைக்கப்பெற்றது நல்லூர் ஆலயத்தின் கற்களை கொண்டே. அவ்வாறென்றால் முதலில் அந்த கோட்டையை உடைக்க வேண்டும்.

பின்னர், கிறிஸ்தவ தேவாலயத்தை உடைக்க வேண்டும். அதன் பின்னரே தையிட்டி பற்றி கதைக்க வேண்டும். யாரோ கூறிய கட்டளைக்கிணங்க இந்த போராட்டம் இடம்பெருகிறது. இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய எவரும் முன்வரவில்லை. இவர்கள் வாக்குகளுக்காக இவ்வாறு செய்கின்றனர்” என கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்