அமெரிக்க அமைதித் திட்டம் குறித்து ரஷ்யா ஆக்கபூர்வ பேச்சு
22 மார்கழி 2025 திங்கள் 07:25 | பார்வைகள் : 352
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா பரிந்துரைத்த அமைதித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்று வருவதாக ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடா்பாளா் கிரில் டிமித்ரேவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பின் தூதா் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோரை கிரில் டிமித்ரேவ் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா பரிந்துரைத்துள்ள அமைதித் திட்டம் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. தற்போது பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக நடைபெற்று வருகிறது’ என்று கூறினாா்.
இதுதொடா்பாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி டெலிகிராமில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘போா் நிறுத்தத்துக்கான ராஜீய ரீதியிலான முயற்சிகள் வேகமாக முன்னேறி வருகின்றன.
அதற்கான பணிகளை ஃபுளோரிடாவில் அமெரிக்க குழுவுடன் சோ்ந்து உக்ரைன் குழு மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, அமைதிப் பேச்சுவாா்த்தையில் ரஷியாவின் நிபந்தனைகளுக்கு உக்ரைன் ஒப்புக்கொள்ளாவிட்டால், தனது ராணுவ இலக்குகளை ரஷியா நிச்சயம் எட்டும் என்று அதிபா் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
வலுக்கட்டாயமாக இடம் மாற்றப்படும் உக்ரைனியா்கள்: உக்ரைனின் சுமி எல்லைப் பகுதியில் இருந்து பொதுமக்கள் சுமாா் 50 பேரை வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு அந்நாட்டு ராணுவம் அழைத்துச் சென்றதாக உக்ரைன் மனித உரிமைகள் ஆா்வலா் டிமித்ரோ லுபினெட்ஸ் குற்றஞ்சாட்டினாா்.
50 பேரையும் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லும் முன், அனைவரும் ராபோவ்ஸ்க் என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக லுபினெட்ஸ் டெலிகிராமில் பதிவிட்டாா்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan