Paristamil Navigation Paristamil advert login

பராசக்தி படத்தின் கதை இதுதானா?

பராசக்தி படத்தின் கதை இதுதானா?

18 மார்கழி 2025 வியாழன் 13:19 | பார்வைகள் : 220


சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் கதை குறித்த தகவல்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா முரளி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பராசக்தி படத்திலிருந்து வெளியான பாடல்கள் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த திரைப்படம் பொங்கலையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், பராசக்தி படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.அந்த தகவல்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது- 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனும் அதர்வாவும் அண்ணன் தம்பிகள்.

இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. அரசு வேலையில் சிவகார்த்திகேயன் பணியாற்றுகிறார். அதர்வா இன்ஜினியரிங் படித்து வருகிறார்.மேலும், அமைச்சரின் மகளாக இருக்கும் ஸ்ரீ லீலாவை சிவகார்த்திகேயன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார் என்று பராசக்தி படம் குறித்து வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்