Paristamil Navigation Paristamil advert login

உள்துறை அமைச்சகத்தை சீண்டிய - 22 வயது இளைஞன் கைது!!

உள்துறை அமைச்சகத்தை சீண்டிய - 22 வயது இளைஞன் கைது!!

18 மார்கழி 2025 வியாழன் 07:17 | பார்வைகள் : 903


பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்தினை சைபர் தாக்குதல் மூலம் அசைத்து பார்த்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் இணைய வழி அஞ்சல் தரவுகளையும், மேலும் சில முக்கிய ஆவணங்களையும் சைஃபர் தாக்குதல் மூலம் சிலநாட்கள் முன்பு திருடப்பட்டிருந்தது.  இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட தேசிய தேடல் மற்றும் தலையீட்டுப் படையணி (brigade de recherche et d'intervention nationale) அதிகாரிகள், நேற்று டிசம்பர் 17, புதன்கிழமை குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.

Limoges (Haute-Vienne) நகரைச் சேர்ந்த, நீதித்துறையால் முன்னரே அறியப்பட்ட குறித்த நபர், 2003 ஆம் ஆண்டு பிறந்தவர் எனவும், சைபர் குற்றங்களுக்கு எதிரான அலுவகத்தினால் ( l'Office anti-cybercriminalité (OFAC) குறித்த இளைஞர் கண்காணிக்கப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்