பங்காளதேஷில் அமெரிக்கர்களுக்கு வெளியான எச்சரிக்கை
18 மார்கழி 2025 வியாழன் 06:04 | பார்வைகள் : 314
டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க குடிமக்களுக்கு நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பங்காளதேஷில் நாடாளுமன்றத் தேர்தலும் தேசிய வாக்கெடுப்பும் பெப்ரவரி 12, 2026 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் பங்காளதேஷில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் திகதி நெருங்கும்போது அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைதியான கூட்டங்கள் கூட வன்முறையாக மாறக்கூடும் என்பதால் பங்களாதேஷ் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் ஊடகங்களில் புதுப்பிப்புகளைக் கண்காணிக்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி விழிப்புடன் இருக்கவும் வலியுறுத்தியுள்ளது.
தேசிய வாக்கெடுப்பு நடைபெறும் அதே நாளில் 300 நாடாளுமன்ற இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும், இது பங்களாதேஷின் வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறவுள்ள இரட்டைத் தேர்தல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan