Paristamil Navigation Paristamil advert login

மொராக்கோ - சஃபி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் - 37 பேர் பலி!

மொராக்கோ - சஃபி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் - 37 பேர் பலி!

17 மார்கழி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 203


மொராக்கோ - சஃபி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொராக்கோவின் தலைநகர் அருகே இருக்கும் சஃபி மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.12.2025 முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 37 பேர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் ஊருக்குள் வரும்போது வீதியில் நிறுத்துவைக்கப்பட்டிருந்த கார்களை அடித்து தள்ளிச்செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும், மொராக்கோவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் சிலவற்றை காலி செய்த ஏழு ஆண்டுகால வறட்சியைத் தொடர்ந்து, அட்லஸ் மலைகளில் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்