Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் - டிரம்ப் உறுதிமொழி!

உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் - டிரம்ப் உறுதிமொழி!

17 மார்கழி 2025 புதன் 15:33 | பார்வைகள் : 196


நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தாம் அளிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வொஷிங்டன்னில் உள்ள தனது ஒவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில்,

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, நேட்டோ மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் நீண்ட மற்றும் ஆக்கபூா்வ பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடனும் எண்ணற்ற முறை பேச்சுவாா்த்தை நடத்தினோம்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தத்தை, இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளோம்.

ஒப்பந்தின் ஒரு பகுதியாக, நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முன்வந்துள்ளேன்.

இதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

அவர்  இருந்தாலும், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவதற்குப் பதிலாக ரஷ்யா உரிமை கோரும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் இன்னும் அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை உக்ரைன் விட்டுத் தர வேண்டும் என்பதை ட்ரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் நேட்டோவின் ‘5ஆவது பிரிவை’ போன்ற வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்