Paristamil Navigation Paristamil advert login

விசா இல்லாத (OQTF) ஆணின் திருமணத்தை மறுத்த Chessy மேயரின் ராஜினாமாவும் நிராகரிப்பும்!!

விசா இல்லாத (OQTF) ஆணின் திருமணத்தை மறுத்த Chessy மேயரின் ராஜினாமாவும்  நிராகரிப்பும்!!

17 மார்கழி 2025 புதன் 13:50 | பார்வைகள் : 403


Chessy நகர மேயரும் அவரது துணை மேயர்களும், முன்பு OQTF (பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவு) பெற்றிருந்த ஒருவரை உள்ளடக்கிய தம்பதியினரின் திருமணத்தை நடத்த மறுத்ததால், தங்களின் பதவியிலிருந்து விலக முடிவு செய்தனர். ஆனால் Seine-et-Marne பிரீஃபெக்சுர் (La préfecture), நகராட்சியின் செயல்பாட்டில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவர்களின் ராஜினாமா கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவின்படி ஒரு திருமணத்தை நடத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய பதவியை விலகத் தேர்ந்தெடுத்தனர். மேலும், 2026 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தல்களை முன்னிட்டு, நகர வாழ்க்கையின் தொடர்ச்சியை பாதுகாக்குமாறு பிரீஃபெக்சுர் மேயரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

2025 மே மாதத்தில், Meaux நீதிமன்றம், ஒரு ஐரோப்பிய குடிமகளுக்கும், முன்பு பிரான்ஸை விட்டு வெளியேற உத்தரவு (OQTF) பெற்றிருந்த ஒரு வெளிநாட்டவருக்கும் இடையிலான திருமணத் திட்டம் குறித்து நகராட்சியிடமிருந்து ஒரு தகவலை பெற்றது.

அதாவது இந்த திருமண விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தம்பதியினருக்கு மோசடி நோக்கம் இல்லை என்றும், அவர்களின் உறவு உண்மையான காதல் அடிப்படையிலானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால், OQTF இனி செல்லுபடியாகாது என்றும், நகராட்சி அதிகாரிகள் சட்டத்தை மீறி திருமணத்தை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நீதிமன்றத் தீர்ப்பால் அதிர்ச்சி ஏற்பட்டதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்தாலும், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்