Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

பிரேசிலில் பலத்த காற்றில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை

16 மார்கழி 2025 செவ்வாய் 07:39 | பார்வைகள் : 426


பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள 'ஹவன்' சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது.

சிலை சரிந்த விழுந்த சம்பவம் , உள்ளூர் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

இந்த சுதந்திர தேவி 1900 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலர் சிலை இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்