Paristamil Navigation Paristamil advert login

தென் அமெரிக்க பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பாடசாலை பேருந்து விபத்து - 17 பேர் பலி

தென் அமெரிக்க பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பாடசாலை பேருந்து விபத்து - 17 பேர் பலி

16 மார்கழி 2025 செவ்வாய் 07:39 | பார்வைகள் : 249


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மலைப்பாங்கான பகுதியில் பாடசாலை பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கொலம்பிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாரினோ மாகாணத்தில் உள்ள பாஸ்டோ நகருக்கு அருகே, பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தாகவும், இதில் 15 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

20 போ் காயமடைந்தனர்.

கடும் மழை காரணமாக சாலை வழுக்கியதே விபத்துக்கு காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் 10 முதல் 15 வயது வரை உள்ள மாணவா்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்