Paristamil Navigation Paristamil advert login

மெக்சிகோவில் விமானம் விபத்து - 07 பேர் பலி

மெக்சிகோவில் விமானம் விபத்து - 07 பேர் பலி

16 மார்கழி 2025 செவ்வாய் 06:39 | பார்வைகள் : 239


மெக்சிகோ நாட்டில் திங்கட்கிழமை 15-12-2025 சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

அபல்கோ நகரில் இருந்து புறப்பட்டு டொலுகா விமான நிலையம் அருகே பறந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சான் மெடிகோ அடென்கோ பகுதியில் உள்ள தொழிற்பூங்கா அருகே விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக தொழிற்பூங்காவில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி தீப்பற்றி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்