Paristamil Navigation Paristamil advert login

5 லட்சத்திற்கும் மேலாக தூக்க மருந்துகளை பாவிக்கும் இல்-து-பிரான்ஸ் மக்கள்!!

5 லட்சத்திற்கும் மேலாக தூக்க மருந்துகளை பாவிக்கும் இல்-து-பிரான்ஸ் மக்கள்!!

15 மார்கழி 2025 திங்கள் 22:37 | பார்வைகள் : 1058


இல்-து-பிரான்ஸ் பகுதியில் இரவுநேர சத்தம் மற்றும் தூக்கமின்மை மருந்துகள் பயன்பாட்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதை Bruitparif டிசம்பர் 15 வெளியிட்ட ஆய்வு வெளிப்படுத்துகிறது. 

இல்த்-து-பிரான்ஸ் மக்களில் 76% பேர் சத்தமுள்ள சூழலில் தூங்குகின்றனர். இதன் விளைவு அவர்களது மருந்து அலமாரிகளில் தெளிவாகத் தெரிகிறது. சாலை போக்குவரத்து, பார்களின் வெளிப்புற மேஜைகள், விமானங்கள் போன்றவை ஆயிரக்கணக்கான மக்களின் தூக்கத்தை பாதிக்கின்றன என, இல்-து-பிரான்ஸ் சத்தம் கண்காணிப்பு அமைப்பு Bruitparif மற்றும் பிராந்திய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளன.

2017 முதல் 2019 வரை 432 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி, சுமார் 5,10,000 பேர் தூக்க மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர், மேலும் மக்கள்தொகையின் 76% (சுமார் 8 மில்லியன் பேர்), உலக சுகாதார அமைப்பு (OMS) பரிந்துரைக்கும் இரவுச்சத்த அளவை (22:00–06:00 இடையே 45 dB) மீறும் சாலை சத்தத்திற்கு உள்ளாகி தூக்கத்தை தொலைத்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வு, பிரான்சில் முதல் முறையாக இரவுச் சத்தம் மற்றும் தூக்கமருந்து செலவுகளுக்கு இடையிலான தொடர்பை நிரூபிக்கிறது. OMS வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால், சுமார் 15,000 பேர் தூக்கமின்மை மருந்துகளைத் தவிர்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள் போக்குவரத்து, இரவுநேர செயற்பாடுகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் இருந்து ஏற்படும் சத்தத்தை குறைக்கும் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும் என ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்