நாளை முதல் - கிறிஸ்மஸ் போனஸ்!!
15 மார்கழி 2025 திங்கள் 19:06 | பார்வைகள் : 2098
நாளை டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமை முதல் இவ்வருடத்துக்கான கிறிஸ்மஸ் ஊக்கத்தொகை வழங்கப்படும். இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
குடும்பநல கொடுப்பனவுகளை வழங்கும் Caisse d’allocations familiales (CAF) இந்த கிறிஸ்மஸ் கொடுப்பனவை வழங்க உள்ளது.
மிக குறைந்த கொடுப்பனவுகளைக் கொண்ட, மாதாந்த உதவித்தொகை பெறும் 2.2 மில்லியன் குடும்பங்கள் இந்த தொகையை தானியங்கி முறையில் வங்கிகளூடாக பெற்றுக்கொள்ள முடியும். €152.45 யூரோக்கள் முதல் அதிகபட்சமாக €442.11 யூரோக்கள் வரை வழங்கப்பட உள்ளது.
பிரான்சில் இந்த கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. இந்த கொடுப்பனவுகளை கட்டாயம் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து, பின்னர் அது கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan