Paristamil Navigation Paristamil advert login

நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமைத் தேர்வு: கடுமையாகும் சட்டங்கள்!!

நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமைத் தேர்வு: கடுமையாகும் சட்டங்கள்!!

15 மார்கழி 2025 திங்கள் 14:03 | பார்வைகள் : 2539


பிரான்சில் நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, 2026 ஜனவரியிலிருந்து புதிய குடியுரிமைத் தேர்வு கட்டாயமாகிறது. முன்னர் இருந்த மாகாண அலுவலக நேர்காணலும் தொடரும்.

பல ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அட்டை (titre de séjour pluriannuel), நிரந்தர குடியிருப்பு அனுமதி (carte de résident) அல்லது பிரெஞ்சு குடியுரிமை கோரும் அனைவரும் (demandes de naturalisation), 45 நிமிடங்கள் நீடிக்கும் இந்த டிஜிட்டல் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் குடியரசின் மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள், அரசியல் அமைப்பு, வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை போன்ற ஐந்து தலைப்புகளில் 40 பன்முகத் தேர்வு கேள்விகள் இடம்பெறும். தேர்வில் வெற்றி பெற 80% சரியான பதிலளிக்க வேண்டும்.

இந்தத் தேர்வு, “குடியரசு ஒருங்கிணைப்பு ஒப்பந்தம்” (CIR) என்ற புதிய குடியேற்றச் சட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தேர்வு கடினமாக இருப்பதாகவும், அதற்கு உயர்ந்த பிரெஞ்சு மொழித்திறன் தேவைப்படுவதாகவும் குடியேற்ற ஆதரவு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. 

“பிரெஞ்சு குடிமக்களை விட வெளிநாட்டவர்களிடம் உயர்ந்த மட்டத்தை கேட்கிறார்கள். பிரான்சில் கல்வியறிவு இல்லாதவர்களும், பலர் பல்கலைக்கழகத்திற்கு செல்லாதவர்களும் உள்ளனர்,” என கத்தோலிக்க உதவி அமைப்பின் (Secours catholique) பிரெஞ்சு மொழி கற்றல் பொறுப்பாளர் ஹெலேன் செக்காத்தோ சுட்டிக்காட்டியுள்ளார். 

நிரந்தர குடியுரிமைக்காக கோரப்படும் B2 மொழித் தரம், பல்கலைக்கழகத்தில் சேர தேவையான அதே தகுதியாகும். அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ள எழுதப்பட்ட பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி அவசியம். இருந்தாலும், இந்தத் தேர்வு பிரான்சில் நீண்டகால குடியிருப்புக்கான தவிர்க்க முடியாத முன் நிபந்தனையாக அமைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்