பிரித்தானிய அரசின் புதிய கிரிப்டோ விதிகள் - 2027 முதல் அமுல்
15 மார்கழி 2025 திங்கள் 12:01 | பார்வைகள் : 219
பிரித்தானிய அரசின் நிதியமைச்சகம் கிரிப்டோகரன்சி சந்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது.
2027-ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டங்கள் அமுலுக்கு வரவுள்ளன.
இதன்மூலம், கிரிப்டோ நிறுவனங்கள் பாரம்பரிய நிதி நிறுவனங்களைப் போலவே Financial Conduct Authority (FCA) எனப்படும் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படவேண்டும் என வலியுறுத்தபடுகின்றன.
நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், "டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் சொத்துக்கள் நுகர்வோருக்கு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். அதற்காக அவற்றை 'rehulatory perimeter' எனப்படும் சட்டதிட்டங்களுக்குள் கொண்டு வருவது அவசியம்" என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கிரிப்டோ சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் மோசடிகள், தவறான வாக்குறுதிகள் மற்றும் பாதுகாப்பற்ற பரிமாற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
கிரிப்டோ நிறுவனங்களும் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தை நிறுவனங்கள் பின்பற்றும் தரநிலைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த சட்டங்கள் அமுலுக்கு வந்தால், கிரிப்டோகரன்சி சந்தை “சட்டப்பூர்வ நிதி சந்தை” என அங்கீகரிக்கப்படும்.
இதனால், பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் செயல்பட முடியும்.
பிரித்தானியாவில் கிரிப்டோ சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சந்தையின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சட்டம் 2027 முதல் நடைமுறைக்கு வரும் போது, கிரிப்டோ உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை உணரக்கூடும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan