Paristamil Navigation Paristamil advert login

லூவ்ர் அருங்காட்சியகத்தில் திங்கள் முதல் தொடர் வேலைநிறுத்தம்!

லூவ்ர் அருங்காட்சியகத்தில் திங்கள் முதல் தொடர் வேலைநிறுத்தம்!

15 மார்கழி 2025 திங்கள் 10:56 | பார்வைகள் : 580


முடி அரசின் பல நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியில் இருக்கும் உலகின் மிக அதிகம் பார்வையிடப்படும் லூவ்ர் அருங்காட்சியகம் (Musée du Louvre), இப்போது தொழிலாளர் போராட்டத்தையும் எதிர்கொள்கிறது. லூவ்ர் அருங்காட்சியகத்தின் தொழிற்சங்கங்கள் இன்று டிசம்பர் 15 திங்கள் முதல் தொடர் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.

நெருக்கடி தொடர்கின்றது. தொழிற்சங்கங்கள், அருங்காட்சியக மேலாண்மை மற்றும் கலாச்சார அமைச்சகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராகின்றனர்.

இது இவ்வாண்டின் இரண்டாவது வேலைநிறுத்தம். ஜூன் 16 திங்கள் அன்று நடந்த முதல் வேலைநிறுத்தம், அதிகமான சுற்றுலா மற்றும் வேலை தரம் மோசமடைதலை எதிர்த்து நடந்தது. அது சில மணி நேரங்களே நீடித்தது.

ஒரு நாளுக்கு சுமார் 30,000 பார்வையாளர்கள் வருகை தருவது, கட்டிடங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள், குறைந்த சம்பளம் ஆகியவை 2,200 பணியாளர்களின் அதிருப்திக்குக் காரணமாகின்றன. மேலும், ஒக்டோபர் 19 அன்று நடந்த அதிர்ச்சிகரமான திருட்டு சம்பவம் சூழ்நிலையை தீவிரப்படுத்தியது.
மேலாண்மையுடன் மோதும் பணியாளர்கள்

SNMD-CGT, CFDT மற்றும் SUD Culture ஆகியவற்றின் கூட்டு வேலைநிறுத்த அறிவிப்பில் பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. தொழிற்சங்கங்கள் அருங்காட்சியக நிர்வாகத்தில் 'மிகவும் கடுமையான மனிதவள மேலாண்மை மற்றும் முரண்பாடான உத்தரவுகள்' என்று எச்சரித்துள்ளன.

அருங்காட்சியகத்தின் பொது நிலையைத் தவிர, வேலைவாய்ப்புக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கண்காணிப்பு காவல்துறை (surveillance) பிரிவில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 அன்று அந்தப் பிரிவு முற்றிலும் செயலிழந்திருந்தது.

சம்பள உயர்வைத் தவிர, ஒப்பந்த பணியாளர்களின் நிலையற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. 'நிரந்தர வேலைவாய்ப்பு (CDI) மூலம்' நிரந்தர தேவைகளுக்கு பதிலளிக்க முடியும்.

அருங்காட்சியக பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகள் அமைச்சக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். தற்போது ஒரு நாள் வேலைநிறுத்தம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை அது தொடரப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்