சட்டசபை தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு!
15 மார்கழி 2025 திங்கள் 11:08 | பார்வைகள் : 155
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், மே மாதம் நிறைவடைய உள்ளதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படும்.
50 சதவீதம்
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. ஆளுங்கட்சியான தி.மு.க., ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில், 50 சதவீதத்திற்கு மேற்பட்டோரின் ஓட்டுகளை உறுதிப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளது.
அத்துடன், தேர்தலுக்கு இளைஞர்களை தயார்படுத்த, மண்டல வாரியாக இளைஞர் அணி மாநாடு நடத்துவது, வீடு வீடாகச் சென்று அரசு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது, மக்களை கவர புதிய திட்டங்களை அறிவிப்பது என மும்முரமாக தேர்தல் பணியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கனவே தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நடைபயணத்தை துவக்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக கட்சியினரை சந்திப்பதுடன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.
இத்தேர்தலில் புதிதாக களமிறங்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் புதிதாக மாவட்ட தலைவர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
அதேபோல, கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விண்ணப்பங்கள் பெறும் பணியையும் அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன.காங்கிரஸ் மற்றும் அ.ம.மு.க., சார்பில், கடந்த 10ம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அ.ம.மு.க.,வில் தமிழக தொகுதிகளுக்கு 10,000; புதுச்சேரி தொகுதிகளுக்கு 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசில் கட்டணம் இல்லை.
பா.ம.க.,வில் விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது. இக்கட்சியில், அதன் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவான நிலையில், பா.ம.க., தலைவர் என்ற முறையில் கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் பணியை, நேற்று அன்புமணி துவக்கி வைத்தார். பொது தொகுதிக்கு 10,000, தனி தொகுதிக்கு 5,000, பெண்களுக்கு 5,000 ரூபாய் என கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை துவக்கவும் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. கடைசி நேரத்தில் தொகுதி பங்கீட்டில் இழுபறி வந்து விடக்கூடாது என்பதற்காக, முன்னதாகவே தொகுதி பங்கீட்டை துவக்கும்படி, தி.மு.க., தலைமைக்கு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், மற்ற கட்சிகளை சேர்க்க பேச்சு நடந்து வருகிறது. மொத்தத்தில் பொங்கலுக்கு முன், கூட்டணி பேச்சை முடிக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan