Paristamil Navigation Paristamil advert login

விருப்ப மனு என்ற பெயரில் பண மோசடி: அன்புமணி மீது டி.ஜி.பி.,யிடம் புகார்

விருப்ப மனு என்ற பெயரில் பண மோசடி: அன்புமணி மீது டி.ஜி.பி.,யிடம் புகார்

15 மார்கழி 2025 திங்கள் 09:08 | பார்வைகள் : 165


பா.ம.க., விருப்ப மனு என்ற பெயரில் பண மோசடி செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி மீது, டி.ஜி.பி., அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருள் நேற்று சென்னையில் அளித்த பேட்டி: பா.ம.க., பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என, மின்னஞ்சல் வாயிலாக தமிழக டி.ஜி.பி.,க்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்; அதேபோல, தேர்தல் கமிஷனிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

யாரும் மனு கொடுத்தும், 10,000 ரூபாய் கொடுத்தும் ஏமாற வேண்டாம். கட்சித் தலைவர் என சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. ஆனால், தேர்தல் கமிஷனை ஏமாற்றியது போல நீதிமன்றத்தையும் ஏமாற்றுகின்றனர்.

உண்மையான பா.ம.க., என்பது ராமதாஸ் தலைமையில் இருப்பது தான்; அவர் தான் கட்சியை உருவாக்கினார். அவர் தான் கட்சியின் நிறுவனர். அவர் தான் கூட்டணியை முடிவு செய்வார்; வெற்றி கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்