Paristamil Navigation Paristamil advert login

மது போதையில், தனது குழந்தையை காரில் விட்டுச் சென்ற பெண்: காரை எங்கே நிறுத்தினார் என்பதையும் மறந்த தாய்!!

மது போதையில், தனது குழந்தையை காரில் விட்டுச் சென்ற பெண்: காரை எங்கே நிறுத்தினார் என்பதையும் மறந்த தாய்!!

13 மார்கழி 2025 சனி 21:02 | பார்வைகள் : 947


மது போதையில் இருந்த சென்னெவியர் (Chennevières) நகரைச் சேர்ந்த ஒரு பெண், தனது மூன்று மாதக் குழந்தையை காரில் மறந்து விட்டு சென்றுள்ளார்; மேலும் காரை எங்கு நிறுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த தந்தை   நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளார். 

காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கி, வாகனத்தின் பதிவு எண் மற்றும் காரிலேயே இருந்த தாயின் கைப்பேசி மூலம் இடத்தை கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு, சைன்-மோர்-தே-ஃபோஸே (Saint-Maur-des-Fossés) நகரில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குழந்தையை மீட்க காவல்துறையினர் காரின் கண்ணாடியை உடைக்க வேண்டியிருந்தது. 

நான்கு மணி நேரம் தனியாக இருந்தபோதிலும் குழந்தை பாதுகாப்பாக இருந்துள்ளது மேலும் உடனே மருத்துவக் குழுவின் கவனிப்பின் பின் குழந்தை விரைவில் தந்தையின் அரவணைப்பில் சேர்க்கப்பட்டது. தாய் போதை தெளிவான பின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தொடரப்படலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்