Paristamil Navigation Paristamil advert login

Colombes நகரில் கொள்ளை: அதிர்ச்சியால் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ நீர் வெளியேற்றம்!!

Colombes நகரில் கொள்ளை: அதிர்ச்சியால் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ நீர் வெளியேற்றம்!!

13 மார்கழி 2025 சனி 13:58 | பார்வைகள் : 513


வியாழக்கிழமை மாலை, கொலோம் (Colombes) நகரின் boulevard de Valmyஇல் உள்ள "Cyber Multimédia” தொலைபேசி கடையில், முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியை காட்டி கொள்ளை நடத்தி உள்ளனர். அவர்கள் கடை மேலாளரை மிரட்டி, தலையில் துப்பாக்கியின் முனையால் கடுமையாக அடித்து, பணப்பெட்டியில் இருந்த சுமார் 1,000 யூரோக்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

சம்பவ நேரத்தில் கடையில் இருந்த வாடிக்கையாளரான எட்டு மாத கர்ப்பிணி பெண், இந்த வன்முறையான காட்சின் கடும் அதிர்ச்சியின் காரணமாக அந்த பெண்ணுக்கு பிரசவ நீர் வெளியேறி, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாயும் குழந்தையும் பற்றிய உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. 

காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கி, ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மற்றொரு நபர் இன்னும் தேடப்பட்டு வருகிறார், விசாரணை தொடர்கிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்