அவதானம்: சோமோன் பியூமே மற்றும் ஃபுவா கிரா திரும்ப பெறப்படுகிறது!!
13 மார்கழி 2025 சனி 08:10 | பார்வைகள் : 978
ஆண்டின் இறுதி விழாக்களை முன்னிட்டு, Delpeyrat பிராண்டின் சோமோன் பியூமே (saumon fumé), லிஸ்டீரியா பக்டீரியா தொற்று அபாயம் காரணமாக திரும்ப பெறப்படுகிறது.
10 துண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட இந்த தயாரிப்பு, நவம்பர் 24 முதல் Leclerc கடைகளில் Auvergne-Rhône-Alpes, Bourgogne-Franche-Comté, Centre-Val de Loire, Nouvelle-Aquitaine, Occitanie மற்றும் Provence-Alpes-Côte d'Azur பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பின் GTIN எண் (பேக்கேஜில் காணப்படும்) 3067163661957 ஆகும். டிசம்பர் 20 வரை கடையில் திருப்பி அளித்து பணத்தை மீட்டெடுக்கலாம்.
இதை உண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதேபோல், Carrefourஇல் விற்பனை செய்த, Sud-Ouest பகுதியிலிருந்து வந்த 10 துண்டுகள் (300 கிராம்) கொண்ட, முழு வாத்து ஃபுவா கிரா (foie gras), பொட்டலமாக விற்கப்பட்ட தயாரிப்பும் பேக்கேஜிங் குறைபாடு காரணமாக திரும்பப்பெறப்படுகிறது.
இந்த தயாரிப்புகள் போதுமான சுகாதார பாதுகாப்பு இல்லாத சூழலில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இந்த தயாரிப்புகின் GTIN எண்கள் 3104544072183 மூலம் அடையாளம் காணப்படுகின்றன. டிசம்பர் 29 வரை, இதனை திருப்ப கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan