பிரெஞ்சு கடற்கரைகளை உளவு பார்க்கும் ரஷ்ய நீர்மூழ்கிகள்!!
12 மார்கழி 2025 வெள்ளி 22:04 | பார்வைகள் : 1415
ரஷ்யாவின் நீர்மூழ்கிகள் ஆங்கிலக்கால்வாயில் அடிக்கடி தென்படுவது குறித்து பல செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது ஆங்கிலக்கடலில் பிரெஞ்சு எல்லைகளுக்கு அருகே மிக நெருக்கமாக ரஷ்ய நீர்மூழ்கிகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில நீர்மூழ்கிகளை பிரித்தானிய கடற்படையினர் மூழ்கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கடலில் இருந்து வரும் ரஷ்ய நீர்மூழ்கிகள் டோவர் ஜலசந்தி (Strait of Dover) ஊடாக பயணித்து ஆங்கிலக்கால்வாய் ஊடாகவும் பணிக்கிறது. உளவு பார்க்கும் நோக்கம் மட்டுமே கொண்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் பல குற்றம் சாட்டியுள்ளன.
பிரித்தானியாவின் கடற்பரப்புக்குள் ரஷ்ய கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் நுழைவது 30% சதவீதம் அதிகரித்துள்ளது. பிரெஞ்சு எல்லைகளுக்குள்ளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் ஆங்கிலக்கால்வாய் பொதுவான கடற்பகுதி என்பதால், அதில் பயணிப்பது சட்டவிரோதம் என்றாகாது என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan