Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்படும் சிறிய பார்சல்களுக்கு 3 யூரோ வரி!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்படும் சிறிய பார்சல்களுக்கு 3 யூரோ வரி!!

12 மார்கழி 2025 வெள்ளி 14:37 | பார்வைகள் : 1072


2026 ஜூலை 1 முதல், ஐரோப்பிய ஒன்றியம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 150 யூரோவிற்குக் குறைவான சிறிய பார்ஸல்களுக்கு 3 யூரோ வரி விதிக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை 2026 ஜூலையில் மட்டுமே அமுலுக்கு வரும்.

ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் Shein தளத்தைச் சுற்றியுள்ள பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனத் தொழில்துறை மிகப்பெரிய எலக்ட்ரானிக் வர்த்தக நிறுவனமான Shein-இன் குழந்தை தோற்றமுள்ள பாலியல் பொம்மைகள் மற்றும் A வகை ஆயுதங்கள் விற்பனைச் சர்ச்சைக்கு பிறகு, பிரான்ஸ் இந்த விவகாரத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது.

Shein, Temu, AliExpress போன்ற ஆசியத் தளங்களில் வாங்கப்படும் மிகக் குறைந்த விலைப் பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்து வருவதால், இது ஐரோப்பிய வணிகர்களுக்கு நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது என்று உறுப்புநாடுகள் வலியுறுத்துகின்றன. இதுவரை இந்த பார்ஸல்களுக்கு சுங்க வரி விலக்கு இருந்ததால், 2024-ல் மட்டும் 4.6 பில்லியன் பார்ஸல்கள் பரிசோதனை செய்ய முடியாத அளவுக்கு ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளன.

இந்த புதிய வரி, 2028 வரை சுங்கக் கட்டுப்பாடுகளை எளிதாக்கும் நீண்டகாலத் திருத்தம் அமுலுக்கு வரும் தற்காலிக நடவடிக்கையாகும். மேலும், 2026 நவம்பரிலிருந்து 150 யூரோவில் குறைந்த மதிப்புள்ள இந்தப் பார்ஸல்களுக்கு 2 யூரோ செயலாக்கக் கட்டணமும் சேர்க்கப்படும். இதன் மூலம் ஐரோப்பிய மற்றும் சீனப் பொருட்களுக்கிடையேயான போட்டி விதிகளைக் கொண்டுவரவும், ஆபத்தான அல்லது போலிப்பொருட்கள் சந்தையில் நுழைவதை கட்டுப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்