Paristamil Navigation Paristamil advert login

கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான முயற்சி; அண்ணாமலை காட்டம்

கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான முயற்சி; அண்ணாமலை காட்டம்

12 மார்கழி 2025 வெள்ளி 06:26 | பார்வைகள் : 129


இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: ஹிந்து விரோத திமுக அரசின் கோபத்தை எதிர்கொண்டுள்ள முருகன் பக்தர்களுக்கு ஆதரவாக நின்ற பெங்களூரு தெற்கு பார்லிமென்ட் எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு மனமார்ந்த நன்றி. இண்டி கூட்டணியின் பதவி நீக்கத் தீர்மானம், அரசியலமைப்பு கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு கடின உழைப்பாளி நீதிபதியை அச்சுறுத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை.

நீதிபதி சுவாமிநாதனின் சாதனை, 8க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தீர்க்கப்பட்ட 73,505 முக்கிய வழக்குகள், அவரது பணி முக்கியமானதாகும். காலை 9 மணிக்கு நீதிமன்ற பணியை தொடங்கி மாலை வரை தொடர்கிறார்.

சுதந்திர நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திமுகவின் முயற்சி, காங்கிரசின்எமர்ஜென்சி காலகட்டத்தில் இருந்து உத்வேகத்தைப் பெறுகிறது. அவர்கள், நீதிமன்றங்களை அச்சுறுத்தினர், மேலும் இந்தியாவின் நீதி அமைப்பின் அடித்தளத்தையே மாற்ற முயற்சித்தனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்