Paristamil Navigation Paristamil advert login

சமூகவலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை! - ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தது என்ன..??!!

சமூகவலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை! - ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தது என்ன..??!!

11 மார்கழி 2025 வியாழன் 15:09 | பார்வைகள் : 966


சிறுவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த முடியாதவாறு தடை விதிக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்தார்.

நேற்று புதன்கிழமை Brittany   நகருக்கு பயணித்திருந்த ஜனாதிபதி மக்ரோன், Ouest-France ஊடகத்தின் ஏற்பாட்டில் 220 இளம் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த முடியாதவாறு சட்டம் ஒன்றை அவரது ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்னர் கொண்டுவருவதாக உறுதியளித்தார்.

சமூகவலைத்தளங்களிம்னால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

”ஃபார்முலா மகிழுந்து ஒன்றின் பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தையை போன்றது இந்த சமூகவலைத்தளத்தின் பாதிப்பு. நான் போட்டியில் வெற்றிபெற விரும்பவில்லை. எனது குழந்தை மகிழுந்தில் இருந்து இறங்குவதையே விரும்புகிறேன்!” எனவும் அவர் தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்