Gare du Nord நிலையம் அருகே இரு பெண்கள் மீது தாக்குதல்!!
10 மார்கழி 2025 புதன் 16:57 | பார்வைகள் : 4006
பரிசில் சில நிமிட இடைவெளியில் இரு பெண்கள் அடுத்தடுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று டிசம்பர் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
காலை 8.35 மணி அளவில் rue du Faubourg Saint-Martin வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண்னை வழிமறித்த ஆண் ஒருவர் அவரின் முகத்தில் குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலை எதிர்பார்த்திராக அப்பெண் நிலைகுலைந்து விழுந்ததோடு, காவல்துறையினரையும் அழைத்துள்ளார். அதற்கிடையில் தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் Lariboisière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களின் பின்னர் Rue de Dunkerque வீதியில் வைத்து மற்றுமொரு பெண் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கும் இளம் பெண் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதலாளியை உடனடியாக கைது செய்தனர். அவரே முந்தைய தாக்குதலிலும் ஈடுபட்டவர் எனவும், அவர் ஒரு வீடற்றவர் (SDF) எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan