Paristamil Navigation Paristamil advert login

2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடக்கலைஞரின் கணிப்பு

10 மார்கழி 2025 புதன் 16:38 | பார்வைகள் : 153


பிரபல ஜோதிடக்கலை நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் புத்தாண்டு குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிவதற்காக உலகில் ஒரு கூட்டம் எப்போதுமே காத்திருக்கிறது.

 

அவ்வகையில், 2026ஆம் ஆண்டு குறித்து நாஸ்ட்ரடாமஸ் என்ன கணித்திருக்கிறார் என்று பார்க்கலாம்.

 

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஜோதிடக்கலை நிபுணர் நாஸ்ட்ரடாமஸ். அவர், எழுதிய ’Les Propheties’ என்னும் புத்தகம் 1555ஆம் ஆண்டு வெளியானது.

 

அந்த புத்தகத்தில், எதிர்காலம் குறித்து கணித்து ஏராளமான விடயங்களை எழுதியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அவை பழங்கால பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளன.

 

உண்மையில், நாஸ்ட்ரடாமஸ் இந்த ஆண்டு இப்படி நடக்கும் என்னும் பாணியில் எழுதவில்லை. அவர் கவிதை நடையில் பல்வேறு விடயங்களை எழுதிவைத்துள்ளார்.

 

அதன் பொருள் இப்படியாகத்தான் இருக்கும் என அவரது கணிப்புகளை ஆராய்வோர் கணித்து எழுதிவருகிறார்கள்.

 

அவ்வகையில், அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, இளவரசி டயானாவின் மரணம், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சு முதல் சமீபத்திய நிகழ்வுகளான கோவிட் வரை நாஸ்ட்ரடாமஸ் முன்கூட்டியே கணித்து எழுதியுள்ளதாக கருதப்படுகிறது.

 

2026இல், 'ஒரு பெரும் தேனீக்கூட்டம் எழும்' என்று கணித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ். அதன் பொருள், பல வலிமையான நபர்கள் கவனம் ஈர்ப்பார்கள் என்பதாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

ட்ரம்ப், புடின் முதலான தலைவர்கள் 2026இல் பெரும் வெற்றியை அனுபவிக்க இருப்பதையே நாஸ்ட்ரடாமஸ் இப்படி கூறியுள்ளதாக கருதப்படுகிறது.

 

செவ்வாய், நட்சத்திரங்களுக்குள் தனது பாதையை ஆளும்போது, சரணாலயம் மனித இரத்தம் தெளிக்கப்படும் என் குறிப்பிட்டுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

 

அதன் பொருள், 2026ஆம் ஆண்டு போர்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதை குறிக்கலாம் என்கிறார்கள் நாஸ்ட்ரடாமஸின் கூற்றுகளுக்கு விளக்கம் அளிப்போர்.

 

குறிப்பாக, மேற்கு ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக கருதப்படுகிறது.

 

மேலும், AI எழுச்சி அடையும், மேற்கு அமைதியில் தனது ஒளியை இழக்கும் என குறிப்பிட்டுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

 

சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் AI தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும் என்பதையே நாஸ்ட்ரடாமஸ் இப்படி கூறியுள்ளதாக கருதப்படுகிறது.

 

2026ஐக் குறித்து இப்படி பல மோசமான விடயங்களே கூறப்பட்டுள்ள நிலையில், சில நல்ல செய்திகளும் உள்ளன.

 

இருள் விலகும், ஒளியின் மனிதன் எழுவார், கவனித்து நோக்குவோரை நட்சத்திரங்கள் வழி நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.

 

போர், நெருப்பு முதலான நெருக்கடிகள் ஓய்ந்தபின், ஒரு மறுபிறப்பின் காலம் உருவாகும், ஒரு புதிய தலைவர் அல்லது அணுகல் உருவாகலாம். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களிலிருந்து விலகி, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வாழும் ஒரு காலகட்டம் உருவாகலாம் என்பது அதன் பொருள் என நாஸ்ட்ரடாமஸின் கூற்றுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்