Paristamil Navigation Paristamil advert login

“சில ஐரோப்பிய தலைவர்கள் உண்மையிலே முட்டாள்கள்”: டிரம்பின் புதிய தாக்குதல்!!

“சில ஐரோப்பிய தலைவர்கள் உண்மையிலே முட்டாள்கள்”: டிரம்பின் புதிய தாக்குதல்!!

10 மார்கழி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 2669


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய தலைவர்களின் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அவர்களில் "சிலர் நண்பர்கள்,  நான் மோசமான தலைவர்களை அறிவேன், புத்திசாலியானவர்களையும் அறிவேன், முட்டாள்களையும் அறிவேன். உண்மையிலேயே முட்டாள்கள் சிலர் உள்ளனர்,"என்று கூறியுள்ளார். 

டிசம்பர், செவ்வாய் 9 அன்று, Politico-க்கு அளித்த பேட்டியில், அவர் "எனக்கு பரிஸ் மிகவும் பிடித்தது. அது முன்னிருந்ததைவிட மிகவும் வேறுபட்ட இடமாகி விட்டது மற்றும் லண்டன் மாற்றம் அடைந்துவிட்டதாகக் கூறி, லண்டன் மேயர் சாதிக் கானை “பயங்கரமானவர்” என விமர்சித்துள்ளார். 

லண்டன் மேயர் கான், செப்டம்பரில், ஐ.நா. மேடையில் குடியரசுக் கட்சியினரால் தாக்கப்பட்ட பிறகு, டொனால்ட் டிரம்பை "இனவெறியர், பெண்வெறியர், பெண்களை இகழ்பவர் மற்றும் இஸ்லாமிய விரோதி" என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியேற்றவாசிகள் “உலகின் எல்லாத் திசையிலும் இருந்து வருகிறார்கள்” என்றும், ஐரோப்பிய தலைவர்கள் “அரசியல் ரீதியாகவே சரியாக இருக்க விரும்புகிறார்கள்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் டிரம்ப், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பானை ஆதரித்ததாகவும், பல ஐரோப்பியர்கள் விரும்பாத தலைவர்களையும் தாம் ஆதரித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

அவரது நிர்வாகம் வெளியிட்ட புதிய ஆவணம், ஐரோப்பாவில் "நாகரிக அழிவு" ஏற்படலாம் என்றும் மற்றும் "மொத்த குடியேற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும்" என்றும் வலியுறுத்துகிறது. 

"தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இருபது ஆண்டுகளுக்குள் அல்லது அதற்கும் குறைவாக, ஐரோப்பாக் கண்டம் அடையாளம் கண்டு கொள்ள முடியாததாக மாறும்," என்று இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது; இது வலதுசாரியின் சதி கோட்பாடு "பெரிய மாற்றம்" (grand remplacement) என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்