Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை மாளிகை ஒவ்வொரு நாளும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது- பராக் ஒபாமா

வெள்ளை மாளிகை ஒவ்வொரு நாளும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது- பராக் ஒபாமா

2 கார்த்திகை 2025 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 473


நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாகவும் வெள்ளை மாளிகை பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.

வேர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் 1.11..2025 நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் வெள்ளை மாளிகையானது ஒவ்வொரு நாளும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகிறது.

மோசமான மனநிலை மற்றும் பைத்தியக்காரத்தனத்தையே மேற்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ட்ரம்பின் கட்டணக்கொள்கை மற்றும் அமெரிக்க நகரங்களுக்கு தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்புவதையும் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் ட்ரம்ப் அமெரிக்க கட்டுப்பாடுகளுக்கு வெளியே இருக்கிறார் என்பதை அறிந்தாலும் கூட அவரை கட்டுப்படுத்துவதை தவறியமைக்காக காங்கிரஸையும் கடுமையாக சாடியுள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்