Shein : BHV-இல் சீன அதிவேக ஆடை நிறுவனத்தின் வருகைத்திகதி அறிவிப்பு!!
31 ஐப்பசி 2025 வெள்ளி 22:08 | பார்வைகள் : 1904
சீனாவின் அதிவேக ஆடை நிறுவனமான Shein, பரிசின் புகழ்பெற்ற பெரிய கடையான BHV du Marais-இல் தனது புதிய கடையை நவம்பர் 5 அன்று மதியம் 1 மணிக்கு திறக்கபடவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை BHV மற்றும் Société des Grands Magasins நிறுவனத்தின் தலைவர் பிரெடெரிக் மெர்லின் தனது Instagram வழியாக உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளிவந்தவுடன், வாடிக்கையாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் ஆடைத் துறை நிபுணர்கள் பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர், ஏனெனில் BHV பரிஸியர்களுக்கு ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
இத்தகவல் வெளியாகிய பின் BHV-யில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது; சில பிராண்டுகள் Shein உடன் ஒரே இடத்தில் இருக்க விரும்பாததால் கடையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளன. இருப்பினும், 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான Shein கடை BHV-யின் ஆறாவது தளத்தில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. நவம்பர் 5 அன்று BHV வரலாற்றில் மிகச் சலசலப்பான நாளாக அமையக்கூடும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan