Paristamil Navigation Paristamil advert login

மகப்பேறு வைத்தியசாலையில் 460 பேர் கொலை - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மகப்பேறு வைத்தியசாலையில் 460 பேர் கொலை - உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

31 ஐப்பசி 2025 வெள்ளி 11:06 | பார்வைகள் : 480


சூடானில் மகப்பேறு வைத்தியசாலையில் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை  28.10.2025, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு வைத்தியசாலைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவ படையினர் கொன்றுள்ளதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 1 முதல் ஒக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போது இச்சம்பவம் நடந்துள்ளன.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்