Paristamil Navigation Paristamil advert login

France Travail : மீது தாக்குதல்! - 31,000 பேருக்கு ஆபத்து!!

France Travail : மீது தாக்குதல்! - 31,000 பேருக்கு ஆபத்து!!

30 ஐப்பசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 2326


France Travail நிறுவனத்தின் மீது மீண்டும் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 31,000 பேரின் தரவுகள் திருடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 29, நேற்று புதன்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. France Travail இற்கு சொந்தமான தரவுகள் சேமிப்பு இணையம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகி தகவல்கள் திருடப்பட்டுள்ளன எனவும், ரஷ்யாவை தளமாக கொண்ட கும்பல் ஒன்றே இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டதாகவும், 31,000 பேரின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம், மின்னஞ்சல் போன்ற விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அவர்களின் வங்கி விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவ்விபரங்கள் பிறிதொரு ரகசிய தளத்தில் பாதுகாக்கப்படுவதால் அவை திருட்டுபோகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட திருடப்பட்ட தரவுகளை கொண்டு, வேலை தேடுவோருக்கான மிக முழுமையான சுயவிபர பட்டியை தயாரிக்க முடியும் எனவும், வேலை வாய்ப்புகளை தருவதாக போலி வாக்குறுதிகள் வழங்கி, பண மோசடிகளில் ஈடுபட சந்தர்ப்பம் நிறைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் France Travail இல் பதிந்து வேலை தேடுவோர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்