லண்டனில் கத்திக்குத்து சம்பவம்- 22 வயது இளைஞர் அதிரடி கைது
28 ஐப்பசி 2025 செவ்வாய் 13:04 | பார்வைகள் : 1041
லண்டனில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 3 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை மாலை லண்டனின் உக்ஸ்பிரிட்ஜில்(Uxbridge) பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாலை 5 மணி அளவில் சம்பவம் நடந்த மிட்ஹர்ஸ்ட் கார்டன்ஸ்(Midhurst Gardens) பகுதிக்கு விரைந்த மெட் பொலிஸார் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 49 வயது மதிப்புடைய நபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 22 வயது நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு அவரை தற்போது காவல் கண்காணிப்பு பொலிஸார் வைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான முழு விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan