Paristamil Navigation Paristamil advert login

இலங்கை முழுவதும் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு

இலங்கை முழுவதும் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு

26 ஐப்பசி 2025 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 224


 

இலங்கை பொலிஸார் நாடு முழுவதும் நடத்திய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 27,890 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 743 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 253 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்