ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை! - மக்ரோன் வரவேற்பு!!
24 ஐப்பசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1984
ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையினை விதித்துள்ளது. இதனை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.
”ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மீது கொண்டுவந்த தடை, சரியான பாதையில் பயணிப்பதை காட்டுகிறது. இந்த யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து ரஷ்யா முதன்முறையாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தடை மேலும் அதன் மூர்க்கத்தனத்தை குறைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இது அவசியமானது!” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
ஒக்டோபர் 23, நேற்று வியாழக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரெஸ்லஸில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு (LNG) எரிவாயு பெறுவதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகவும், குறிப்பாக Rosneft மற்றும் Lukoil ஆகிய இரு ரஷ்ய நிறுனங்களோடு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், அதனோடு இணைந்து வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan